காசாவில் துயரம் ; இஸ்ரேல் தாக்குதலில் மருத்துவர் குடும்பம் பலி
இஸ்ரேல் மேற்கொண்ட வான்தாக்குதலில் காசா இந்தோனேசிய மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் மர்வான் சுல்தான் மற்றும் அவரது குடும்பத்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா நகரில் உள்ள தொடர்மாடி தாக்கபபட்டவேளை மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களது உறவினரான அஹமட் சுல்தான் என்பவர் உடல்களை அடையாளம் காண்பித்துள்ளதுடன் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.
மருத்துவர் மர்வான் அல் சுல்தானின் உடல் அல்ஷிபா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மருத்துவரின் முகம் அடையாளம் காணும் நிலையில் இருக்கவில்லை என மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் அபுசல்மியா தெரிவித்துள்ளார்.
காசா நகரில் ஹமாசின் முக்கிய இலக்கொன்றை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் , பொதுமக்களிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.