ரஷ்ய ஆற்றில் மூழ்கி 4 இந்திய மாணவர்கள் பலி
ரஷ்யாவில் மருத்துவம் படிப்பதற்காக சென்ற இந்திய மாணவர்கள் 4 பேர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
பீட்டர்ஸ்பர்க். அவர்களின் உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க ரஷ்ய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இந்த விடயம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்ட போது,
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் அனந்தராவ் தசலே, ஜிஷான் அஷ்பக் பிஞ்சாரி, ஜியா பைரோஜ் பிஞ்சாரி, மாலிக் குல்ம்கோஸ் முகமது யாகூப் ஆகிய 4 மாணவர்கள் ரஷ்யாவின் நோவ்கோரோட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருவது தெரியவந்துள்ளனர்.
இது குறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவின்படி உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.