4 மாதம் இரவு, 4 மாதம் பகல் ; இப்படி ஒரு நாடு எது தெரியுமா..?
பொதுவாக அனைவருக்கும் விடியல் வந்தால் நிச்சயம் இரவு வரும். மீண்டும் விடியும் என்பதுதான் தெரியும். ஆனால் இங்கு 6 மாதம் விடியல் மட்டுமே இருக்கும். அடுத்த 6 மாதம் இரவு மட்டுமே இருக்கும். இந்த நாடுதான் பூமியின் கடைசி நாடாகவும் உள்ளது.
இப்படி 6 மாதம் பகலாகவும் 6 மாதம் இரவாகவும் இருக்கும் நாடு நார்வேயில் ஆர்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் என்ற தீவு பற்றி தான் நாம் இங்கு பார்க்க போகின்றோம்.
இங்கு பகல், இரவு 6 மாதங்கள் நீடிக்க அதன் அமைவிடம்தான் காரணமாக உள்ளது. அதாவது இது பூமியின் கடைசி நாடாக இருப்பதால், அது தனது அச்சில் சுழலும் வட துருவத்திற்கு அருகில் இந்த நாடு அமைந்துள்ளது. எனவேதான் இதன் இரவு 6 மாதமும், பகல் 6 மாதமும் நீடிக்கிறது.
6 மாத இரவின் போது சூரியன் அடிவானத்திற்கு கீழ் மறைந்திருக்குமாம். அதற்கு போலார் நைட் என்று அழைக்கின்றனர். அந்த இரவை காண கண்கோடி வேண்டும் என்று அனுபவித்தவர்கள் சொல்வார்கள்.
இதற்காகவே இந்த இரவை அனுபவிக்க பலர் இங்கு செல்கின்றனர். இந்த இரவானது அக்டோபர் பிற்பகுதியிலிருந்து பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கிறது.
ஏன் அது வசீகரிக்கும் இரவு என்று சொல்லப்படுகிறது தெரியுமா..? ஏனெனில் சூரியன் வானின் அடிப்பகுதியில் ஒளிந்திருப்பதால் ஸ்வால்பார்ட் பகுதி முழுவதும் சூரியனின் வெளிச்சம் பட்டும் படாமலும் தெரியும்.
இதனால் வானம் நீலம் மற்றும் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். அதன் பிரதிபளிப்பு பளிங்கு கற்களைபோல் ஒளிரும் பனிக்கட்டிகள் மீது விழும்போது காண்பதற்கே கண்கொள்ளா காட்சியாக அமைகிறது. இதன் அழகை காணவே சுற்றுலா பயணிகள் பலர் இங்கு குவிகின்றனர்.
இங்கு மற்றுமொரு அரிய நிகழ்வு என்னவெனில் நடு இரவில் சூரியனை பார்க்கலாம். அதாவது ஏப்ரல் நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை ஸ்வால்பார்ட் தீவில் கப்பலில் பயணம் செய்தால் நள்ளிரவில் சூரியன் தெரியும். சூரியனுக்கு கீழ் நீங்கள் பயணம் செய்வீர்கள்.
அதிலிருந்து வீசும் ஒளி பல வண்ணங்களை நம் மீது தூவிச் செல்லும். அந்த வண்ணங்கள் அந்த பகுதியை ரம்மியமான அழகால் கொள்ளைகொள்ளும். சொல்லும்போதே உங்களுக்கும் காண ஆசை வருகிறது.
இந்த நாட்டில் பகல் , இரவு எப்படி இருந்தாலும் வாழ்க்கை தரம் , பொருளாதாரம் தங்குதடையின்றி நடந்துக்கொண்டிருக்கிறது.