பிரிட்டிஷ் கொலம்பியாவில் கோர விபத்து
பிரிட்டிஷ் கொலம்பிய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த பணியாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்பு பணிகளுக்கு உதவிகளை வழங்கியதன் பின்னர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய தீயணைப்பு படை வீரர்கள் சிலர் தீ விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தீயணைப்பு சேவை இரங்கல் வெளியிட்டுள்ளது.
பிக்கப் ரக வாகனம் ஒன்றும் டிராக்டர் ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
பிக்கப் ரக வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.