40 ஆயிரம் ரூபா இருந்தால் போதும்.....அழகிய இந்த தீவை கண்டு ரசிக்கலாம்!
இந்திய ரூயாயில் 40 ஆயிரம் ரூபா இருந்தால் போதும். ஓர் அற்புதமான தீவை நீகள் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் சுற்றிப்பார்க்கலாம். அந்த அழகான தீவுதான் கம்போடியா.
இந்தோனேசிய தீபகற்பத்தின் தென்பகுதியில் உள்ள சிறிய நாடு கம்போடியா. பெளத்த மத வழிபாட்டுத் தலங்கள், உயர்ந்த கோபுரங்கள், சிலைகள் நிறைந்த இந்நாடு பட்ஜெட் சுற்றுலா விரும்பிகளின் ஆதர்ச தேர்வாக உள்ளது.
ஒரு இந்திய ரூபாய் 52 கம்போடிய ரியாலுக்கு சமம். இந்நாட்டில் நூறு ரூபாய்க்கு சொகுசு கெஸ்ட் ஹவுஸ் ஒரு நாள் வாடகைக்கு எடுக்கலாம். இதில் ஐந்து பேர் கொண்ட ஓர் குடும்பம் தங்கலாம். 60 நாள் கம்போடிய சுற்றுலா விசாவுக்கு இணையத்தில் உங்கள் அடிப்படைத் தரவுகளை அளித்து விண்ணப்பிக்கலாம்.
இதற்கு இணைய கட்டணமாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலுத்தவேண்டும். கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட மூன்று நாடுகளையும் சுற்றிப்பார்க்க தற்போது சுற்றுலா நிறுவனங்கள் பேகேஜ் திட்டங்களை அறிவிக்கின்றன. ஆனால் உங்கள் பட்ஜெட் 40 ஆயிரம் ரூபாய்க்குள் இருந்தால் நீங்களே உங்கள் துணையுடன் கம்போடியாவுக்கு சென்று வரமுடியும்.
அங்கோர்வாட் பழம்பொருள் ஆராய்ச்சிப் பூங்கா, கோ ரோங் சாம்லோன் கடற்கரை, ரத்னகிரி ஆன்மிகத் தலம், பிரசாத் பிரியா விஹார், இயற்கை காட்சிகள் நிறைந்த பட்டம்பாங் கிராமம் உள்ளிட்டவை காணவேண்டிய இடங்கள்.
கம்போடியாவின் தலைநகர் நோம் பென். நவீன காஃபி ஷாப்கள் முதல் திரையரங்குகள்வரை அனைத்தையும் உள்ளடக்கிய நவநாகரிக நகரம். இங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கம்போடியாவின் வரலாற்று சின்னங்கள், ஆவணங்கள் உள்ளன. மேலும் கம்போடிய கலாசாரம் குறித்து தெரிந்துகொள்ள செல்லவேண்டிய முக்கிய இடம் இது.
அதிகாலையில் காம்பாட் ஆற்றில் படகு சவாரி மேற்கொள்வது மனதுக்கு இதமான அனுபவமாகத் திகழும். டொனல் சாப் நன்நீர் ஏரியில் 300-க்கும் மேற்பட்ட மிதக்கும் படகுகளில் மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ஏரியில் மிதக்கும் சிறிய கிராமம்போல இது காட்சியளிக்கும். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோரியர்கள் காலத்துக்கு முந்தைய கோவில் சாம்போர் ப்ரே குக். பிரம்மாண்டமான மரத்துக்குகீழ் இக்கோயில் அமைந்து இருக்கும்.
மொத்தத்தில் நான்கு இரவுகள் ஐந்து நாட்கள் மனதுக்கினியவருடன் தங்கி சுற்றுலா செல்ல ஏற்ற இடம் கம்போடியா எனவும் கூறப்படுகின்றது.