டொரண்டோவை அச்சுறுத்தும் குரங்கம்மை
ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோய் தொற்றாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
மாகாணத்தில் இதுவரை சுமார் 400 பேர் நோய் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பதிவான நோயாளர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் டொரண்டோவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பின்னர் நோய் தொற்றாளர் எண்ணிக்கை 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
பதிவாகிய மொத்த நோயாளரை எண்ணிக்கையில் 78% மாணவர்கள் டொரண்டோ பொதுச் சுகாதார வலய எல்லைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் இடையில் இந்த நோய் அதிக அளவில் பரவியுள்ளதாகவும் எவருக்கும் இந்த நோய் தொற்று பரவக் கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே குரங்கம்மை நோய் தொற்றை ஓர் உலக அவசர நிலைமையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.