உக்ரைன் மீது 420 டிரோன்கள், 39 ஏவுகணைகள் மூலம் சரமாரி தாக்குதல்
உக்ரைன்- ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் தூதர்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா சரமாரி வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

அமெரிக்கா பேச்சுவார்த்தை
420 டிரோன்கள் மற்றும் 39 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா மீது உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. 39 ஏவுகணைகளில் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும்.
8 பிராந்தியங்களில் உள்ள முக்கியமான கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முயற்சிக்காக புதன்கிழமை இரவு டொனால்ட் ட்ரம்ப் உடன் டெலிபோனில் பேசும்போது நன்றி தெரிவித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், உக்ரைன் நிலத்தை தங்கள் இடமாக கருதுவதாக ரஷ்யா கூறி வருகிறது. இந்த விசயத்தில் முடிவு எட்டப்படாமல் உள்ளது.