அமெரிக்காவில் சர்ச்சை ஏற்படுத்திய 43 அடி உயர டிரம்பின் நிர்வாண சிலை! வைரல் வீடியோ
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். மேலும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
43-foot nude statue of President Trump placed just outside of Las Vegas.
— Paul A. Szypula ?? (@Bubblebathgirl) September 30, 2024
It’s made from foam over rebar, weighs roughly 6k pounds, and features a marionette design with movable arms.
If a similar statue was done of Kamala Harris the country would shut down. pic.twitter.com/eA87RiFXNK
இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சிலை இன்றையதினம் அகற்றப்பட்டுள்ளதுடன் யார் இந்த சிலையை வைத்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.