ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு; ஒரே நாளில் நுழைந்த 49,000 குடியேறிகள்

Refugee Immigration Spain Africa
By Sulokshi Jul 31, 2026 01:30 PM GMT
Report

  ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள செயூட்டா பகுதிக்குள் ஒரே நாளில் சுமார் 49,000 குடியேறிகள் நுழைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் குறைந்தது 7,000 பேர் சிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், மொராக்கோவிலிருந்து சுமார் 49,000 குடியேறிகள் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயினின் வட ஆப்பிரிக்கப் பகுதியான சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்துள்ளதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

ஸ்பெயின் எல்லையில் பெரும் பரபரப்பு; ஒரே நாளில் நுழைந்த 49,000 குடியேறிகள் | 49 000 Migrants Entered Spain In A Single Day

கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகள்

வியாழக்கிழமையன்று (30) ஆயிரக்கணக்கான மக்கள் கடர்மார்க்கமாக நீந்தி நகருக்குள் வருவதை வீடியோக்களும் படங்களும் காட்டின. அதேவேளையில், இரவு முழுவதும் இத்தகைய வருகைகள் தொடர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அண்மைய நாட்களில் அப்பகுதியை அடைய முயன்றவர்களில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்!

ஏதிலிகளை தடுக்க தேசிய அவசரநிலையை அறிவித்த ஸ்பெயின்!

சியூட்டா (Ceuta) அல்லது மற்றொரு ஸ்பானியப் பகுதியான மெலில்லாவை (Melilla) அடைய முயலும்போது கடலில் தடுத்து நிறுத்தப்படும் குடியேறிகளை மொராக்கோவிற்கு உடனடியாகத் திருப்பி அனுப்ப முடியாது என்று ஸ்பெயினின் உயர் நீதிமன்றம் இந்த மாதம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அண்மையில் எல்லை கடக்கும் முயற்சிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் அதிகாரிகள் மாட்ரிட்டிடம் உதவி கோரியிருந்தனர்.

ஆனால், வியாழக்கிழமையன்று எல்லைக் கட்டுப்பாடுகள் செயலிழந்ததால் அங்கு குழப்பமான காட்சிகள் நிலவின. பின்னர், ஸ்பெயின் தனது ஆயுதப் படைகளை செவுட்டாவிலும், அதன் சகோதர நகரமான மெலிலாவிலும் பாதுகாப்பை வலுப்படுத்த அனுப்பியது.

அங்கும் ஒரே இரவில் 300 முதல் 400 பேர் வரை எல்லை கடக்க முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஸ்பானிய அதிகாரிகளின் வியக்கத்தக்க மதிப்பீட்டின்படி, கடந்த ஓரிரு நாட்களில் சியூட்டாவிற்குள் (Ceuta) நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை, அந்நகரின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலாக இருக்கலாம்.\

  உள்ளூர் புள்ளிவிவரங்களின்படி இந்நகரின் மக்கள் தொகை சுமார் 83,600 ஆகும். தங்கள் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அனைவரையும் முடிந்தவரை விரைவாக திருப்பி அனுப்புவதை உறுதிசெய்ய மொராக்கோவுடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US