வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் 4-வது டோஸ்!
நான்காவது டோஸ் தடுப்பூசி வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதன் பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒன்று போடப்படுகிறது.
ஆனால் பிரித்தானியாவில் 3-வது பூஸ்டர் டோஸ் மட்டுமின்றி, வசந்த காலத்தையொட்டி 4-வது பூஸ்டர் டோஸும் போடப்படுகிறது. இது அதிக பாதிப்புக்கு ஆளாகிற நிலையில் உள்ளவர்களுக்கு போடப்படுகிறது.
அதிகளவு நோய் எதிர்ப்புச்சக்தியை பராமரிப்பதற்காக இந்த 4-வது டோஸ், முன் எச்சரிக்கை உத்தியாக அங்கு பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில் 4-வது டோஸ் தடுப்பூசியாக பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொள்கிறபோது, அது வலுவான நோய் எதிர்ப்புச்சக்தியை தருகிறது என்பது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.