ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தட்டம்மை
கனடாவின் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு தேவாலயங்களில் சின்னம்மை (Measles) தொற்று அபாயம் ஏற்பட்டிருக்கலாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒட்டாவா பொதுச் சுகாதார அலுவலகம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒட்டாவா நகரைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு விவரங்கள் கிடைக்கும் இடங்களில், சின்னம்மை வைரஸுக்கு உட்பட்டிருக்கக் கூடிய நபர்களுக்கு நேரடியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது என ஒட்டாவா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த பொது அறிவிப்பு, நேரடியாக தொடர்பு கொள்ள முடியாதவர்கள் அல்லது தொடர்பு விவரங்கள் முழுமையற்றவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி போட்டிருந்தாலும், தொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய நாளில் இருந்து 21 நாட்கள் வரை அறிகுறிகள் தோன்றுகிறதா என கவனிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
உயர் காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் வடிதல், வாயில் வெள்ளை தழும்புகள், கண்களில் சிவப்பும் ஒளி உணர்வும் ஆகியவை முதன்மையான அறிகுறிகளாகும்.
அறிகுறிகள் பொதுவாக 7 முதல் 12 நாட்களுக்குள் தோன்றலாம், சில சமயம் 21 நாட்கள் வரை தாமதமாகவும் தோன்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.