கனடாவின் ஒன்றோரியோ அரசாங்கம் 50000 டொலர் சன்மானம் அறிவிப்பு: எதற்கு தெரியுமா?
கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 50000 டொலர் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலான தகவல்களை வழங்குவோருக்கு இவ்வாறு சன்மானம் வழங்கப்பட உள்ளது.
ஒன்றாரியோவின் ஹகர்ஸ்வில் பகுதியைச் சோந்த 33 வயதான எம்பர் எலிஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் எலிஸை இறுதியாக பார்த்ததாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண்ணின் காணாமல் போதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கும் தண்டனை விதிப்பதற்கும் உதவும் நபருக்கு 50000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விரிவான அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த காணாமல் போதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் 1-866-549-2090 அல்லது 1-888-310-1122, 1-800-222-8477 ஆகிய இலக்கங்களில் ஒன்றுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.