ஈராக்கில் பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழப்பு; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
ஈராக்கின் குட் நகரில் சந்தையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐந்துமாடிக்கட்டிடம் முற்றாக தீயில் சிக்குண்டுள்ளதையும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளி;ல் ஈடுபட்டுள்ளதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகின்றன.
சந்தை மற்றும் உணவகம் அமைந்திருந்த பகுதியில் தீபரவியது அவ்வேளை பல குடும்பத்தவர்கள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தனர் பொருட்கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர் என வஸ்ஜித் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50க்கும் அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வணிகவளாகம் சில நாட்களிற்கு முன்னரே திறக்கப்பட்டது முதல் தளத்திலேயே தீ பரவியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீயில் கருகிய உடல்களை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றது.