ஐந்து லட்சம் ஆப்கான் பிரஜைகளை நாடு கடத்திய ஈரான்
இஸ்ரேல்–பாலஸ்தீன் மோதல் முடிவடைந்ததிலிருந்து வெறும் 16 நாட்களுக்குள், 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கான்கள் ஈரானிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த தகவல்க வெளியிட்டுள்ளது.
இந்த அசாதாரணமான மக்கள் நகர்வு, இந்தத் தசாப்தத்தில் காணப்பட்ட மிகப் பெரிய கட்டாய இடம்பெயர்வாக இருக்கலாம் என்றும் உலக இடம்பெயர்வு அமைப்புகள் எச்சரிக்கையுடன் குறிப்பிட்டுள்ளன.
ஈரான், கடந்த பல மாதங்களாகவே தங்களது நாட்டில் வசித்து வந்த பதிவுசெய்யப்படாத ஆப்கான்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தது.
இவர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியத்தில், கடினமான வேலைகளை ஈரானில் மேற்கொண்டு வந்துள்ளனர்.
தற்போதைய கணக்கீடுகளின்படி, ஜூன் 24 முதல் ஜூலை 9 வரை, 508,426 ஆப்கான் பிரஜைகள், ஈரான்-ஆப்கான் எல்லையை கடந்து தாய்நாட்டிற்கு திரும்பியுள்ளனர் என சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
ஒரே ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2.5 இலட்சம் பேர் நாடு திரும்பியுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.