கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் ஹாமில்டனில் நேற்று காலை வாகனங்கள் இரண்டு நேருக்கு நேர் மோதிய விபத்தில் 55 வயது சாரதியொருவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்டாரியோ மாகாண காவல்துறை (Ontario Provincial Police) தெரிவித்தது விபத்து நேற்றைய தினம் காலை 9:30 மணியளவில், Highway 5 – Rock Chapel Road மற்றும் Millgrove Side Road இடையே, Dundas Street East அருகே இடம்பெற்றுள்ளது.
காவல்துறையின் சார்ஜென்ட் கெரி ஷ்மிட் (Kerry Schmidt) வெளியிட்ட தகவலின்படி, பிரான்ட்ஃபோர்டைச் சேர்ந்த 55 வயது சாரதி ஒருவர் மேற்கே சென்று கொண்டிருந்த ஒரு டெலிவரி லாரியை செலுத்திக் கொண்டிருந்தார்.
அப்போது, கிழக்கே சென்று கொண்டிருந்த, மணல் ஏற்றி வந்த பெரிய டிரெய்லர் மீது இந்த டெலிவரி லாரி மோதியுள்ளது.
டிரெய்லர் டிரைவர் விபத்தை தவிர்க்க முடியாமல் போனதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நேருக்கு நேர் மோதி விபத்தில், டெலிவரி லாரியின் டிரைவர் வெளியே எறியப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்திற்குப் பிறகு, டெலிவரி லாரியில் தீ பற்றியதோடு, நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் நொறுங்கிய பொருட்கள் பறந்தன.
உயிரிழந்த நபரின் பெயர் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
விபத்திற்கான காரணங்களைப் பற்றிய போலீஸ் விசாரணை தொடருகிறது.