ஷாப்பிங் மாலின் கூரை இடிந்து விழுந்து 6 பேர் பலி, 78 பேர் காயம்
வடமேற்கு பெருவில் உள்ள ஒரு ஷொப்பிங் மாலின் கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லா லிபர்டாட் பகுதியில் உள்ள ஒரு நகரமான ரியல் பிளாசா ட்ருஜிலோ ஷொப்பிங் மாலின் கனமான இரும்பு கூரை வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்துள்ளது.
உயிரிழப்பு
இச் சம்பவத்தின் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் வால்டர் அஸ்டுடிலோ தெரிவித்துள்ளார்.
காயமடைந்த 30 பேர் ஏற்கனவே வீடு திரும்பியுள்ளதாகவும், 48 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்த அமைச்சர், மூவரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேடுதல் பணிகள் தொடர்ந்தும் இடம் பெறுகின்ற நிலையில், ஷாப்பிங் மால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது.