கனடாவில் படகொன்று கவிழ்ந்து விபத்து: 6 பேர் மாயம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஜலசந்தி ஒன்றில் படகொன்று மூழ்கியதில் அதிலிருந்த 6 பேரைக் காணவில்லை.
நேற்று காலை 11.45 மணியளவில், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ஜார்ஜியா ஜலசந்தியில் பயணித்துக்கொண்டிருந்த படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்தப் படகில் 10 பேர் பயணித்ததாகக் கூறப்படும் நிலையில், தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த நான்கு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் மூன்று பேருடைய நிலைமை சீராக இருப்பதாகவும், ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், படகில் பயணித்தவர்களில் மீதமுள்ள ஆறு பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.
இதற்கிடையில், படகில் பயணித்தவர்கள் யார், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.