கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
கனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ பொலிஸ் கான்ஸ்டபிள் கிறிஸ்ஜோர்ஸ் பிரிச்சாலா சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரையில் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த மரணங்கள் கரிசனைக்கு உரிய விடயமாகும் என மேற்கு பல்கலைக்கழகத்தின் குற்றவியல் ஆய்வாளரும் பேராசிரியருமான மைக்கல் ஆர்ன்ட்பீல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் எதேற்சையாக இட்பெற்றவை என்பது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மரணம் என்பது குறித்து கரிசனை கொள்ள வேண்டிய அவசியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் முதல் இதுவரையில் கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் ஐந்து பேர் பணியில் இருந்த போது உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் கடமையில் இல்லாத போது கொல்லப்பட்டுள்ளார்.