Coca-Cola இல் கைவைத்தவருக்கு 6 வாரம் சிறை!
சிங்கப்பூரில் மளிகைக் கடையிலிருந்து 3 Coca-Cola கேன்களைத் திருடிய ஆடவருக்கு 6 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத ஜஸ்விந்தர் சிங் தில்பாரா சிங் என்ற 61 வயது ஆடவர் கடந்த மாதம் 26 ஆம் திகதி இந்த திருட்டைப் புரிந்தார்.
ஜாலான் ரூமா திங்கி (Jalan Rumah Tinggi) புளோக் 9-இல் உள்ள மளிகைக் கடைக்குச் சென்றிருந்த அவர் குளிர்பதனப் பெட்டியிலிருந்து 3 கேன்களை எடுத்தார்.

எனினும் அவற்றுக்குக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் சிங் ஒரு கேனிலிருந்து குடித்தார். எஞ்சிய இரண்டு கேன்களை அவர் வீட்டில் வைத்துக்கொண்டார்.
இந்நிலையில் கடை உரிமையாளர்கள் சிங் கேன்களைத் திருடியதைக் கண்காணிப்புக் கேமராப் பதிவுகளில் கண்டனர்.

அது குறித்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, Coca-Cola குடித்தவர் அன்றே கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் சிங்கின் வீட்டில் இருந்த 2 கேன்களும் கடையிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டதுடன் Coca-Cola திருடியவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.