நியூசிலாந்தில் கரையொதுங்கிய பெருமளவு திமிங்கலங்கள்; கடலுக்குள் அனுப்ப போராடும் தன்னார்வலர்கள்
நியூசிலாந்தின் தென் தீவில் உள்ள ஒரு தொலைதூர கடற்கரையில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து ஆறு திமிங்கலங்கள் உயிரிழந்தன.
உயிருடன் இருக்கும் மற்ற 15 திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல தன்னார்வலர்கள் நேரத்துடன் போராடி வருகின்றனர்.
வியாழக்கிழமை அன்று சுமார் 55 பைலட் திமிங்கலங்கள் ஃபேர்வெல் ஸ்பிட் கடற்கரையில் கரை ஒதுங்கின.
அவற்றில் பெரும்பாலானவை மீண்டும் கடலுக்குள் திரும்பிச் சென்ற நிலையில், 15 திமிங்கலங்கள் மீண்டும் கரை ஒதுங்கி, இப்போது கடற்கரையின் சுமார் 1 கி.மீ (0.6 மைல்) நீளத்திற்குப் பரவிக் கிடக்கின்றன.

2017 ஆம் ஆண்டில் , 400-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்
இந்நிலையில் திமிங்கலங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க தன்னார்வலர்கள் வாளிகளில் தண்ணீர் ஊற்றுவது காட்டப்பட்டது. திமிங்கலங்களை மீண்டும் மிதக்க வைக்கும் பணிக்கு உதவுமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதைக் கண்காணிக்க, நியூசிலாந்தின் பாதுகாப்புத் துறை ஃபேர்வெல் ஸ்பிட்டிற்கு வனக்காவலர்கள், ஒரு படகு மற்றும் ஒரு ட்ரோனை அனுப்பியுள்ளது.
அதேவேளை கடந்த 2017 ஆம் ஆண்டில் , 400-க்கும் மேற்பட்ட நீண்ட துடுப்பு பைலட் திமிங்கலங்கள் அங்கு கரை ஒதுங்கின . இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நியூசிலாந்தில் நடந்த மிகப்பெரிய திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிகழ்வு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.