கனடாவில் மருத்துவர்களுக்கு இவ்வளவு தட்டுப்பாடா?
கனடாவின் ஆறு மில்லியன் பேருக்கு குடும்ப மருத்துவர்கள் கிடையாது என அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஓராண்டுக்கு மேல் குடும்ப மருத்துவர் ஒருவரை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களின் ஆரோக்கியத்துடன் ஒப்பீடு செய்யும் போது மருத்துவரின் சேவை கிடைக்காதவர்களின் ஆரோக்கியம் குறைவாக காணப்படுகின்றது.
கனடாவில் சுகாதாரத்துறையில் பொதுவாக ஆளணி வளத் தட்டுப்பாடு வெகுவாக காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
கனடாவின் சில பகுதிகளில் ஒட்டு மொத்த நகரிற்கும் ஒரு குடும்ப மருத்துவரே சேவையாற்றுகின்றார்.
ஒன்றாரியோவின் வீத்தாலீ என்னும் இடத்தில் 1400 பேருக்கு ஒரு மருத்துவரே சேவையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக் கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 35 வீதமான கனேடியர்கள் ஒரு ஆண்டு காலமாக குடும்ப மருத்துவர் ஒருவரை தேடி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.