50000 டொலர் பெறுமதியான போதைப் பொருள் கடத்திய 7 பேர் கைது
கனடாவில் சுமார் 50000 டொலர் பெறுமதியான போதைப் பொருள் கடத்திய ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒன்றாரியோ மாகாணத்தின் கராவாதா லேக்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் நீண்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நகரில் மித மிஞ்சிய அளவில் போதை மருந்து பயன்படுத்தி சம்பவித்த மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர்களிடமிருந்து கொக்கேய்ன் உள்ளிட்ட சில வகை போதைப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 56000 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து சந்தேக நபர்கள் பெனிலோன் போல்ஸ் பகுதியிலும், தலா ஒருவர் லின்ட்ஸே மற்றும் பிக்கரிங் ஆகிய பகுதிகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.