கனடாவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய பின்னடைவு
கனடா, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தட்டம்மை ஒழிப்பு அந்தஸ்தை இழந்துள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு, நாட்டில் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்த தட்டம்மை பரவலை கட்டுப்படுத்த முடியாததன் விளைவாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுகாதார நிபுணர்கள் கடந்த மாதமே, கனடாவிடமிருந்து இந்த அந்தஸ்தை நீக்கப்போவதாக எச்சரித்திருந்தனர்.

தற்போது, 10 மாகாணங்களில் 9 மாகாணங்களிலும் ஒரு வடக்கு பிராந்தியத்திலும் மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட தட்டம்மை நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அண்மையில் நோய்த்தொற்று குறைந்தாலும், 12 மாதங்களுக்கு மேலாக பரவல் நீடித்து வந்துள்ளது, குறிப்பாக தடுப்பூசி போடாத சமூகங்களில் இது அதிகமாக உள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 தொற்றுக்குப் பிறகு தடுப்பூசிகள் மீதான நம்பிக்கை குறைந்ததால், நாட்டின் சில பகுதிகளில் தடுப்பூசி விகிதம் குறைந்து வருகிறது. இது, தடுப்பூசிகளால் தடுக்கக்கூடிய நோய்கள் மீண்டும் பரவும் அபாயத்தைக் குறிக்கிறது என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.