ஒன்டாரியோவில் சீரற்ற வானிலையால் 200க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள்
டொரொன்டோ பெரும்பாக பகுதியில் (GTA) கடந்த 24 மணி நேரத்திற்குள் 200க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் மொத்தம் சுமார் 220 விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல நேரங்களில் பனி என நினைத்தாலும் அது சிறிது அளவில் மட்டுமே இருக்கும், ஆனால் இப்போது உண்மையில் கனமான பனி பெய்தததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனிப் பொழிவு
மாலை நேரத்தில் பனிப் பொழிய நின்ற பின்னர் வெப்பநிலை திடீரென குறைந்ததால், தரையில் இருந்த பனி கடினமான பனிக்கட்டியாக மாறியது என குறிப்பிட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை டொரொன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 10 சென்றிமீற்றர் பனியும், ஹாமில்டனில் 17 செ.மீ. பனியும் பதிவாகியுள்ளது என கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பனி மற்றும் பனிக்கட்டி சாரதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அதுவே விபத்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தது என தெரிவித்துள்ளனர்.
டொரொன்டோ மற்றும் சுற்றுப்பகுதிகளுக்காக வெளியிடப்பட்ட சிறப்பு வானிலை எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாலும், திங்கட்கிழமையிலும் சில இடங்களில் பனி பெய்யும் வாய்ப்பு (30%) உள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.