கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஜப்பான் அரிசி
உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசி ஜப்பானில் விளைவிக்கப்படும் நிலையில், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
இதன்படி, இந்த அரிசி விலை கிலோ ஒன்றின் விலை 12,500 ரூபாயாக உள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த புதியவகை அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கின்மேமை பிரீமியம் என அழைக்கப்படும் இந்த அரிசிதான் உலகில் மிகவும் விலையுயர்ந்த அரிசியாக உள்ளது.
அரிசி உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், கின்மேமை பிரீமியம் அரிசி 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் 840 கிராம் அரிசி 5490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அப்போது இந்த அரிசி, உலகிலேயே அதிக விலையுள்ள அரிசி என கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்த நிலையில், குறித்த அரிசி மேம்படுத்தப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது