அமெரிக்காவை உலுக்கிய சம்பவம் ; 3 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு இளைஞன் தற்கொலை
அமெரிக்காவின் டெக் சாஸ் நகரில் வடக்கு பகுதியில் உள்ள வணிக வளாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.இதைப்பார்த்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

தற்கொலை
பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரும் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து சென்று அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரும் சக ஊழியர்கள் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.