கனடாவில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் கலிடன் பகுதியில், வாகனங்களின் அடையாளத்தை மறைக்கும் சட்டவிரோத மாற்றங்களுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட கடுமையான கண்காணிப்பு நடவடிக்கையில், நூற்றுக்கணக்கான சாரதிகள் சிக்கியுள்ளனர்.
கலிடன் பொலிஸார் எட்டு நாட்கள் நீடித்த சிறப்பு சாலை பாதுகாப்பு நடவடிக்கையை அண்மையில் நிறைவு செய்துள்ளனர்.
பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு வார இறுதிகளில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 1,100க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில் 745 சமப்வங்கள், சட்டவிரோத டிண்ட் கண்ணாடிகள் மற்றும் வாகன நம்பர் ப்ளேட் மறைப்புகள் தொடர்பானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கருமையான டிண்ட் கண்ணாடிகள் ஓட்டுநரின் பார்வையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், போலீசாரும் மற்றும் பிற சாலைப் பயனாளிகளும் வாகனத்தின் உள்ளே பார்க்க முடியாத நிலையை உருவாக்குகிறது என கலிடன் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சாலையை கடக்கும் போது அல்லது திரும்பும் போது, பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் மற்றும் மற்ற ஓட்டுநர்கள் பார்வை சிக்னல்களை நம்புகின்றனர். ஆகவே தெளிவான பார்வை மிகவும் முக்கியமானது,” என்றும் அவர் கூறினார்.
மேலும், மறைக்கப்பட்ட நம்பர் ப்ளேட்டுகள் காரணமாக போலீசார் சாலை விதிகளை அமல்படுத்துவதிலும், விபத்துகளை விசாரிப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது.
இது பொதுமக்கள் பாதுகாப்பையும் சட்ட அமலாக்கத்தின் செயல்திறனையும் பாதிக்கிறது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.