உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 08 பேர் பலி
இந்த ஆண்டு உக்ரேன் தலைநகரில் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் ரஷ்யா, கியேவை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒரே இரவில் தாக்கியதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதேநேரம், கியோவில் உள்ள கட்டிடங்களும் கடுமையாக சேதங்களுக்கு உள்ளாகியது.
மிருகத்தனமான இந்த தாக்குதலானது அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தடையாக இருப்பதை எடுத்துக் காட்டுவதாக உக்ரேனின் வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா எக்ஸில் குறிப்பிட்டுள்ளார்.
புதன்கிழமை (23) இரவு நேரத் தாக்குதல் குறித்து ரஷ்யா உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
நகர மையத்திற்கு மேற்கே உள்ள ஸ்வியாடோஷின்ஸ்கி மாவட்டத்தில் மிகவும் கடுமையான தாக்குதல் அரங்கேறியுள்ளது.
அங்கு மீட்புப் பணியாளர்கள் இரண்டு கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றும் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஒரே இரவில் நடந்த தாக்குதலில் ரஷ்யா 145 ட்ரோன்கள் மற்றும் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட 70 ஏவுகணைகளை ஏவியதாக உக்ரேனின் விமானப்படை டெலிகிராமில் தெரிவித்துள்ளது.
அதேநரேம், உக்ரேனின் விமானப்படை பிரிவுகள் 112 இலக்குகளை சுட்டு வீழ்த்தின. 2022 ஆம் ஆண்டில் மொஸ்கோவின் முழு அளவிலான படையெடுப்புடன் தொடங்கிய உக்ரேனில் ரஷ்யாவின் போரின் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த தாக்குதல் நடந்தது.
கெய்வ் மற்றும் மொஸ்கோ இரண்டும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்தின் கீழ் ஒரு அமைதி ஒப்பந்தத்தை நோக்கி முன்னேற்றத்தைக் காட்ட வேண்டியிருந்தது.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் இருந்து விலகிச் செல்வதாக ட்ரம்பும் அவரது நிர்வாகமும் அச்சுறுத்தியுள்ளன.
இதனால் ஐரோப்பிய நாடுகள் கெய்வை ஆதரிக்க வழிகளைத் தேடுகின்றன.