வெதுப்பக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட 8 இலட்சம் முட்டைகள்!
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 8 இலட்சம் முட்டைகள் முத்துராஜவளையில் உள்ள கைத்தொழில் வலயத்தில் வைத்து வெதுப்பக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
குறித்த முட்டைகள் நேற்றைய தினம் (30-03-2023) வெதுப்பக உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் பாரியளவில் வெதுப்பக தொழிற்துறையை முன்னெடுக்கும் 10 வெதுப்பக உரிமையாளர்கள் இதன்போது முட்டைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் முன்கூட்டியே பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருத்து வெளியிட்டுள்ள தேசிய கால்நடை உற்பத்தி சங்கத்தின் இணைப்பாளர் சுஜீவ தம்மிக்க,
முட்டை இறக்குமதியில் ஆர்வம் காட்டும் அதிகாரிகள் உள்ளூர் முட்டை உற்பத்தித் துறையை பாதுகாப்பதற்கு முன்வராமை கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தன்னிறைவு கண்டிருந்த இலங்கையின் முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி தற்போது 60 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
முட்டை உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.