புத்த மதத்தில் 8 வயது சிறுவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பதவி! கொண்டாடும் மக்கள்
புத்த மதத்தின் மூன்றாவது பெரிய தலைவராக 8 வயது சிறுவனை மதத் தலைவர் தலாய் லாமா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் மங்கோலியாவைச் சேர்ந்த 8 வயது சிறுவனை இவ்வாறு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்தச் சிறுவனுக்கு 10ஆவது கல்க்ஹா ஜெட்சன் தம்பா ரின்போசே என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சி, ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் கடந்த 8ஆம் திகதி நடந்துள்ளது.
இரட்டையர்களில் ஒருவரான இந்தச் சிறுவனின் தந்தை அமெரிக்காவில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது பாட்டி, மங்கோலிய நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
தந்தை அல்டன்னர் சின்ச்சுலூன் எனவும், தாயார் மங்க்னசன் நர்மதனாக் என தெரியவந்துள்ளது.
தங்களது நாட்டைச் சேர்ந்த சிறுவன் புத்த மதத்தின் மூன்றாவது பெரிய தலைவராக நியமிக்கப்பட்டதை அறிந்த உடன் மங்கோலிய மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.