லாட்டரியில் கிடைத்த 80 கோடி ரூபாய்; வியப்பை ஏற்படுத்திய இங்கிலாந்து இளைஞனின் செயல்!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் 20 வயதான கார்லிஸில் கிளர்க்சன். கேஸ் இன்ஜினியராக பணியாற்றி வரும் இவருக்கு லாட்டரி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.
இந்த நிலையில்தான், கடந்த மாதத்தில் கிறிஸ்துமஸ் நேஷனல் லாட்டரியில் 120 பவுண்டுகள் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. சிறிய தொகை என்பதால் பரிசாக கிடைத்த முழு பணத்திற்கும் லாட்டரியை வாங்கியிருக்கிறார்.
இதில்தான், 7.5 மில்லியன் பவுண்டுகள் அவருக்கு கிடைத்துள்ளமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தநாளே வழக்கம்போல தனது வழக்கமான பணி
இது குறித்து கார்லிஸில் கிளர்க்சன் தெரிவிக்கையில்,
நான் என் காதலியின் வீட்டில் இருந்தேன். அன்று அதிகாலை பனிப்பொழிவு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக எழுந்தேன். அப்போது லாட்டரி தொடர்பாக எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. நான் வெற்றிப்பெற்றுவிட்டேன் என்று அதில் இருந்தது.
ஆனால், என்னால் அதை நம்ப முடியவில்லை. என் தந்தையிடம் ஃபோன் செய்து இதுப்பற்றி கூறினேன். அவர் வீட்டுக்கு வருமாறு கூறினார். வீட்டிற்கு சென்றதும் எனது சகோதரர், தந்தை என்று அனைவரும் எப்போது 9 மணி ஆகும் என காத்திருந்தோம்.
லாட்டரி அலுவலகம் திறந்ததும் போன் செய்து வின்னிங் நம்பரை உறுதி செய்து கொண்டோம். எனக்குத்தான் பரிசு விழுந்துள்ளது என்பதை உணர்ந்ததும் பைத்தியம் பிடித்தது போல கத்தினேன். எங்கள் வீட்டில் அனைவருமே இப்போது இந்த லாட்டரியில் விழுந்த பரிசு பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்னுடைய குடும்பம் பெரியது. அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்து விட்டது ” என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், லாட்டரி அடித்த அடுத்தநாளே வழக்கம்போல தனது வழக்கமான பணிக்கு சென்றுவிட்டாராம் இந்த இளைஞர். கேஸ் இன்ஜியனரான இவர், அடைப்புகளை சுத்தம் செய்யும் பணிகளையும் செய்துவந்திருக்கிறார்.
80 கோடி ரூபாய்க்கு அதிபதியான பின்னரும் அவர் அப்பணிக்கு சென்றிருப்பது, இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.