சரமாரியாக ஏவப்பட்ட 800 ட்ரோன்கள் ; மீண்டும் போர் பதற்றம்
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.
ஆனாலும் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதலை நடத்தி உள்ளது.

தலைநகர் கீவ், மேற்கு நகரமான லிவிவ், கருங்கடலில் உள்ள ஒடெசா துறைமுகம் உள்பட உக்ரைனில் 20 இடங்களில் இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் சுமார் 800 டிரோன்கள் உக்ரைன் மீது சரமாரியாக ஏவப்பட்டன.
அவற்றை தடுக்க உக்ரைனின் வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. ஆனாலும் டிரோன்கள் உக்ரைனுக்குள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதல்கள் பல மணி நேரம் நீடித்தது.
ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களில் 6 பேர் பலியானார்கள். குழந்தைகள் உள்பட பலர் காயம் அடைந்தனர். இந்த போரில் ரஷ்யா நடத்திய மிக நீண்ட தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.