கனடிய கடவுச்சீட்டு அலுவலங்களில் ஆட்குறைப்பு
கனடிய கடவுச்சீட்டு அலுவலகங்களில் ஆட்குறைப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள், கனடா முழுவதிலும் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 800 தற்காலிக ஊழியர்களின் பணிகள் முடிவுக்கு வரவிருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு கோரிக்கைகள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், Service Canada தன் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.
“இந்த முடிவு எளிதில் எடுக்கப்படவில்லை. அரசு துறையாக, எதிர்பார்க்கப்படும் வேலைச்சுமை அடிப்படையில் நிதி மேலாண்மை சீராக நடைபெற வேண்டும். வருமானம் மற்றும் செலவுகள், குறிப்பாக ஊழியர்களுக்கான சம்பளச் செலவுகள் ஆகியவை சமமாக இருக்க வேண்டும்” என்ற காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
கனடா அரசுத் துறையில் வேலைவாய்ப்புகள் கடந்த காலங்களில் 9,800 இற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.