கடந்த ஆண்டில் மாத்திரம் 9,000 புலம்பெயர்வாளர்கள் பலி; வெளியானது விபரம்
2024ஆம் ஆண்டில் மாத்திரம் புலம்பெயர்ந்த 9,000 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, உயிரிழந்தவர்களில் 10ல் ஒருவர் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறையினால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆசிய கண்டத்திலேயே இவ்வாறான உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான், மியன்மார், பங்களாதேஷ் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான வன்முறை மரணங்கள் சம்பவித்துள்ளன.
எனவே, இவ்வாறான உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச அளவிலான செயற்திட்டம் ஒன்று அவசியமாக உள்ளதென சர்வதேச புலம்பெயர்வோருக்கான அமைப்பின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.