கலிபோர்னியா ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 9 பேர் மாயம்
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் காஸில் பிக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் சிக்கி கொண்டனர்.
எனினும், பனிக்கட்டிகளுக்கும், பனிச்சரிவுகளுக்கும் மத்தியில் அவர்கள் தவித்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

இதில் மீட்கப்பட்ட 6 பேரில், 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எனினும், காணாமல் போன மீதமுள்ள 9 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கமும் அந்த பகுதியில் காணப்படுகிறது. இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே பல மணிநேர போராட்டத்திற்கு பின்னரே 6 பேர் மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீதமுள்ளவர்களை மீட்கும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது.