தாய்க்கு பிரசவம் பார்த்த 9 வயது மகள்!

Sulokshi
Report this article
அமெரிக்காவில் 9வயது மகளே தாய்க்கு பிரசவம் பார்த்த சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. அமெரிக்காவின் மிஸ்சோரி மாகாணத்தை சேர்ந்த பெண் ஏஞ்சலிக்கா குண், இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
அத்துடன் அவரது கணவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அகேலா குண் என்ற 9 வயது மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏஞ்சலிக்கா தனது இரண்டாவது குழந்தை வயற்றில் சுமந்து கொண்டிருந்தார்.
அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தன் கணவர் அலுவலகம் சென்றிருந்த நேரத்தில் அவரது மனைவிக்கு குறிப்பிட்ட திகதிக்கு பிரவச வலிஏற்பட்டது.
இதனை அடுத்து அவர் தன் கணவருக்கு போன் செய்தார். அவரது கணவர் அலுவலகத்திலிருந்து கிளம்பியதும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி கொண்ட கணவனால் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் வேறு வழியில்லாமல் ஏஞ்சலிக்கா தனது மகளை அழைத்து தனக்கு பிரசவம் பார்க்க என்ன செய்ய வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார்.
அவர் சொல்ல சொல்ல 9வயது மகள் தாய்க்கு பிரசவம் பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.