ரஷ்யாவின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த 97 உக்ரைன் குழந்தைகள்
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) கவலை வெளியிட்டுள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில், அந்நாட்டு உறுப்பினர்களிடையே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) காணொளி மூலம் பேசியபோது அவர் இந்த தகவை வெளியிட்டார்.
இதன்போது தங்கள் நாட்டுக்கு கனடா அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி கூறினார். உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா அடுத்தடுத்து மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டிய செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) , ரஷ்யாவின் அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் கூறினார்.
அதோடு இந்த போரில் உக்ரைன் சந்தித்து வரும் பாதிப்புகள் குறித்து விளக்கிய அவர், போரினால் உக்ரைனில் 97 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவலையும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) வெளியிட்டார்.