உக்ரைனில் போரில் பிறந்த 987 போர் குழந்தைகள்!
தனது மிக நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி முதல் ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியதில் இருந்து நேற்று வியாழக்கிழமை வரை தலைநகர் கீவில் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் பேரழிவுகளுக்கு மத்தியில் தலைநகர் கீவில் நேற்று வியாழக்கிழமை வரை 35 நாள்களில் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், 534 ஆண் குழந்தைகள், 453 பெண் குழந்தைகள், 25 இரட்டைக் குழந்தைகள் என மொத்தம் 987 குழந்தைகள் பிறந்துள்ளது. உக்ரைனின் கீவில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையின் தரைத்தளம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவ வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நடந்து வரும் பேரழிவுகளுக்கு மத்தியில் கீவ் நகரம் குழந்தைகள் பிறந்த கொண்டாட்டச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டு வருவதால், கீவில் நம்பிக்கை ஒளிர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
ராணுவச் சட்டத்தின் கீழ் உள்ள கீவில், மக்கள் "தலைநகருக்குத் திரும்பத் தொடங்கி உள்ளதாகவும், வார தொடக்கத்தில் ஊரடங்கு இரண்டு மணிநேரம் குறைக்கப்பட்ட உத்தரவை அடுத்து, தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
மது மீதான தடையை வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரங்களுக்குள் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கீவ் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுபவர்களுக்கு கீவில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கீவ் நகர புற்றுநோயியல் மையத்தில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், "மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
" நகரம் முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு உளவியல் நிபுணர்கள் குழுவாகவும், தனிப்பட்ட முறையிலும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
" ரஷியப் படைகள் தலைநகர் கீவில் இருந்து விலகி பெலாரஸ் நோக்கி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், கீவிற்கு எதிரான தாக்குதலில் குறைந்த எண்ணிக்கையிலான ரஷ்யப் படைகளே ஈடுபட்டு வருகின்றன என்று கீவ் நகர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

