பிரித்தானியாவிற்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
துருக்கியில் உள்ள டலமானில் இருந்து மான்செஸ்டருக்குச் சென்ற ஜெட்2 பயணிகள் விமானம், வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து இரண்டு RAF போர் விமானங்களின் உதவியுடன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், விமானத்தை விமான நிலையத்திற்குள் உள்ள தொலைதூர பகுதியில் தரையிறக்கியுள்ளனர்.
இந்நிலையில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவம் இப்போது எசெக்ஸ் காவல்துறையால் கையாளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தால், ஓடுபாதையை இரவு 9 மணிக்கு அரை மணி நேரம் மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது மீண்டும் இரவு 9.30 மணியளவில் திறக்கப்பட்டு தற்போது முழுமையாக இயங்கி வருகிறது. டலமானில் இருந்து மான்செஸ்டர் செல்லும் Jet2 விமானம் இன்று மாலை ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலையத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன் பிரதான பயணிகள் முனையத்திலிருந்து தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது.
ஓடுபாதை சிறிது நேரம் மூடப்பட்டது, ஆனால் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.