வானில் தூக்கி வீசப்பட்ட மகிழுந்து: அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் மகிழுந்து ஒன்று தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.
இந்த விபத்து மார்ச் 23ம் திகதி அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சாட்ஸ்வொர்த்தில் (Chatsworth) உள்ள ஃப்ரீவே 118 ல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
சாலையில் சென்று கொண்டிருந்த பிக்அப் டிரக்கில் இருந்து கழன்ற டயர் ஒன்று, கருப்பு நிற மகிழுந்து ஒன்றின் மீது மோதியதில் கார் வானில் தூக்கி வீசப்பட்டது.
அதே நேரத்தில், டிரக்கில் இருந்து வெளியேறிய டயர் மகிழுந்தை மீண்டும் பின்புறமாக தாக்கியது.
இந்த சம்பவத்தின் போது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவர் காரில் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் பெரிய காயங்கள் எதுவும் இன்றி உயிர் பிழைத்தாக லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.