நியூ யோர்க் நகரில் இடிந்து விழுந்த வாகனத் தரிப்பிடம்!
அமெரிக்காவின் நியூ யோர்க் நகரில் வாகனத் தரிப்பிட கட்டடமொன்று இடிந்ததால் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழந்ததுள்ளார்.
மேன்ஹெட்டன் பிரதேசத்திலுள்ள பல மாடி கட்டடமொன்று செவ்வாயன்று இடிந்துள்ளது என அசர சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கட்டடத்தில் மேலும் இடிபாடுகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் மீட்புக் குழுவினரை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் தீயணைப்புத் திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். எனினும், மோப்பநாய்கள் மற்றும் ட்ரோன்கள் சகிதம் கட்டடத்துக்குள் தேடுதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
"கட்டடம் சிதைவடையும் போது அதற்குள் 6 பேர் இருந்தனர் என நம்பப்படும் நிலையில், ஒருவர் உயிரிழந்துவிட்டார். நான்கு பேர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.