ஜெர்மனியில் வைத்தியர் ஒருவரின் அட்டகாசம்; சுற்றி வளைத்த பொலிஸார்!
ஜெர்மனி நாட்டில் பணியாற்றி வந்த முதன்மை வைத்தியர் ஒருவர் பல மோசடிகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வைத்தியரின் வீடும் அவரது அலுவலகமும் பொலிஸாரின் சுற்றி வலைப்புக்கும் தேடுதலுக்கும் உள்ளாகியுள்ளது. ஓபோர்ஸன் நகரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் முதன்மை வைத்தியராக கடமையாற்றுகின்ற 48 வயதுடைய ஒருவர் 100க்கு மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுப்பட்ட நிலையில் சுற்றி வலைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இவரது அலுவலங்கள் மற்றும் வீடுகள் பொலிஸாரால் முற்றுகையிட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவர் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் பொழுது மிகவும் கவனக்குறைவான முறையில் நடந்துள்ளார் என்றும் இவர் மீது குற்றஞ்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணத்தினால் இவர் ஏற்கனவே பதவியில் இருந்து விலக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதன்போது கடந்த வைகாசி மாதம் 2021 ஆண்டுக்கும் ஐப்பசி மாதம் 2022 ஆண்டுக்கும் இடையில் இவ்வாறான இந்த முதன்மை வைத்தியர் முறைக் கேடான சம்பவங்களில் ஈடுப்பட்டார் என்று தெரிய வந்திருக்கின்றது.