அமெரிக்காவில் மனித தலையுடன் தெருவில் சுற்றித் திரிந்த நாயால் அதிர்ச்சி!
அமெரிக்காவில் மெக்சிகோவில் உள்ள சாலையில் இரவு நேரத்தில் ஒரு நாய் துண்டிக்கப்பட்ட தலையுடன் வாயில் கவ்வியபடி சுற்று திரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வடக்கே உள்ள ஜாகேட்டிகேஸ் என்ற மாகாணத்தில் குற்றம் நடந்த இடத்தில் இருந்து மனித தலையை நாய் எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் துண்டாக்கப்பட்ட தலையானது மான்டே எஸ்கோபெடோ நகரத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் "அடுத்த தலை உன்னுடையது" என்று எழுதப்பட்ட வாசகம் எச்சரிக்கைப் பலகையுடன் தொடங்கவிடப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், போதைப்பொருள் ஆசாமிகள் அதிகாரிகளை அச்சுறுத்தும் நோக்கத்தில் இது போன்றவற்றை செய்து இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தெருநாய் சடலத்தின் தலையை கழுத்தில் பிடித்துக்கொண்டு தெருக்களில் ஓடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.