அமெரிக்காவின் அடுக்குமாடி குடியிருப்பில் தீ
அமெரிக்காவின், நியூயோர்க் நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 60 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், பிராங்க்ஸ் சுற்றுப்புறத்தில் உள்ள 19 மாடி அடுக்குமாடி கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினார்.
அது குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கான குடியிருப்புக் கட்டடம் என்று நம்பப்படுகிறது கடுமையாகக் காயமடைந்த சுமார் 30 பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 பேர் கடுமையான காயமடைந்தனர்.
அதுபோன்ற குறைந்த வருமான வீடமைப்புக் கட்டடங்களில் போதிய பண முதலீடு இல்லாததால், அவற்றில் வாழ்பவர்களின் வீடுகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் தீச்சம்பவங்கள் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என்றும் அஞ்சப்படுகிறது.