சீன வானில் அதிசயத்தை நிகழ்த்திய பறவைக்கூட்டம்
சீனாவில் லட்சக்கணக்கான ஸ்டார்லிங் பறவைகள் ஒன்றிணைந்து நடனமாடுவது போல வானில் ஜாலம் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வடக்கு ஆஸ்திரேலியா மற்றும் வெப்ப மண்டல பசுபிக் தீவுகள் ஆகியவற்றை தாயகமாகக் கொண்டு உள்ளவை தான் ஸ்டாலிங் பறவைகள். எதிரிகளிடம் இருந்து தங்களை காத்துக் கொள்ள எப்போதுமே கூட்டமாகவே மட்டும் வாழும்.

அதேபோல் வானில் பறக்கும்பொழுது ஒன்றொடொன்று இணைந்து கூட்டமாகவே பறக்கும். இந்தப் பறவைகளின் குரல் பலரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை.
மனிதர்கள் பேசுவது போன்ற குரல் அமைப்பு, கார் ஹாரன் சத்தம் போன்று இவை ஒலி எழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.
இவ்வாறு பல்வேறு வகையான தன்மைகளை கொண்ட ஸ்டார்லிங் பறவைகள், சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் ஒன்றாக இணைந்து பறந்தன. இதனை மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.