மைதானத்திற்குள் திடீரென புகுந்த பாம்பால் ஏற்பட்ட பெரும் பரபரப்பு!
கவுகாத்தில் நடைபெற்று வரும் இந்தியா - தென்னப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியின்போது மைதானத்தில் பாம்பு புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் சுற்றுபயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேன 2வது டி20 போட்டி கவுகாத்தியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் தேம்ம பவுமா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்திய அணி 7 ஓவர்களில் முடிவில் 68 ரன்கள் எடுத்து இருந்தது. அப்போது மைதானத்தில் நடுவே பாம்பு ஒன்று உள்ளே புகுந்ததால் பீல்டிங் செய்து கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அலறினர்.
An unwanted spectator at the stadium ?#INDvsSA #Cricket pic.twitter.com/7ckmzIOp66
— Deepak Upadhyay (@iam_udeepak) October 2, 2022
இதனையடுத்து அங்கு வந்த பராமரிப்பு வீரர்கள் மைதானத்தில் ஊர்ந்து சென்று வீரர்களை பயமுறுத்திய பாம்பை பிடித்தனர்.
இதனால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பாம்பு மைதானத்திற்கு வந்தபோது வீரர்கள் மட்டும் இல்லாமல் நேரில் ஆட்டத்தை பார்த்த ரசிகர்களும், நேரலையில் போட்டியை பார்த்தவர்களுக்கும், சற்று வெள வெளத்துதான் போனார்கள்.