பிரித்தானிய அரண்மனைக்குள் நுழைந்த மர்ம நபர்!
பிரித்தானிய மகாராணியார் வாழும் பக்கிங்காம் அரண்மனைக்குள், நான்கு நாட்களில் இரண்டு முறை நுழைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
டேனியல் பிரிட்ஜஸ்(Daniel Brydges)(33) என்ற அந்த நபர், லண்டனிலுள்ள அரண்மனையைச் சுற்றியுள்ள வேலியை சேதப்படுத்தி அரண்மனைக்குள் நுழைந்துள்ளார்.

ஆனால், அந்த நேரத்தில் மகாராணியார் அரண்மனையில் இல்லை. அவர் விண்ட்சர் மாளிகையில் இருந்திருக்கிறார். பாதுகாக்கப்பட்ட இடத்துக்குள் அத்து மீறி நுழைந்தது மற்றும் வேலியை சேதப்படுத்திய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள டேனியல் பிரிட்ஜஸ்(Daniel Brydges), இன்று Westminster நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.

ஏற்கனவே,ஜஸ்வந்த் சிங் சைல் (Jaswant Singh Chail)(19) என்னும் இளைஞர், வில் அம்புடன் விண்ட்சர் மாளிகைக்குள் நுழைந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டது நினைவிலுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        