இந்தியாவிலும் பரவிவரும் புதிய கொரோனா ; கோவை விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
சிங்கப்பூரில் பரவி வருகின்ற புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 324 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் குறித்த தொற்றுப் பரவலினால் அச்சமோ, பதற்றமோ கொள்ளத் தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது என்றும் இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இந்திய சுகாதாரத்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தினசரி ஏராளமான பயணிகள் இந்த கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் தற்போது கோவை சர்வதேச விமான நிலையத்தில் இந்த கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் கொரோனா அலைகள் அனைத்தும் முடிந்த பின்னர் நீண்ட நாட்களாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட வில்லை. தற்போது இந்த காய்ச்சல் கண்டறியும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.