மன்னர் சார்லஸ் பயணிக்கும் பாதையில் திடீரென ஒருவர் நுழைந்ததால் பரபரப்பு!
பிரித்தானிய மன்னர் சார்லஸ் (King Charles III)பயணிக்கும் பாதையில் திடீரென ஒருவர் நுழைந்ததால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பிரித்தானிய மகாராணியாரின் மறைவைத் தொடர்ந்து அவரது மகனான இளவரசர் சார்லஸ் (King Charles III)மன்னராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில், லண்டனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு செல்வதற்காக விமானப்படை விமான நிலையம் நோக்கி மன்னர் சார்லஸ் (King Charles III)பயணித்துக்கொண்டிருந்தார்.
மகாராணியாரின் இறுதிச்சடங்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவர் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்துக்கு செல்வதற்காக தனது பாதுகாவலர்கள் சூழ சென்றுகொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஓடிவந்த ஒருவர், மன்னரின் காருக்கு முன்னல் சென்று காரை நிறுத்துங்கள் என்பது போல கைகாட்ட, காருக்குள்ளிருந்த பாதுகாவலர்கள் பரபரப்பானார்கள்.
Man runs onto the A40 as he spots King Charles on his way to Northolt pic.twitter.com/Co5J799iMg
— UB1UB2 Southall (@UB1UB2) September 12, 2022
ஆனால், அந்த நபரோ மன்னரின் காரை ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அமைதியாக சென்றுவிட்டார்.
அந்த நபர் மன்னரை எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துவிடவேண்டும் என்பதற்காக வெகுதூரத்திலிருந்தே ஓடி வருவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணமுடிகிறது என்றாலும், மன்னர் பயணிக்கும் பாதையில் ஒருவர் திடீரென குறுக்கே புகுந்தது ஒரு பெரும் பாதுகாப்புக் குளறுபடியாக கருதப்படுகிறது.