அமெரிக்காவில் சூப்பர் ஹீரோவாக மாறிய பீட்சா டெலிவரி ஊழியர்!
அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில், பீட்சா டெலிவரி ஊழியர் ஒருவர், தீப்பற்றி எரிந்த வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட 5 குழந்தைகளை பத்திரமாக மீட்டார்.
25 வயதான நிக்கோலஸ் போஸ்டிக் (Nicholas Bostick) என்ற அந்த இளைஞர் நள்ளிரவில் வீடு ஒன்று தீப்பிடித்து எரிவதை கவனித்துள்ளார்.
உடனடியாக, பின் வாசல் வழியாக உள்ளே புகுந்த நிக்கோலஸ்(Nicholas Bostick), தூங்கி கொண்டிருந்த 4 குழந்தைகளை கத்தி எழுப்பி வெளியே அழைத்து வந்துள்ளார்.
இதனோடு ஒரு குழந்தை மாடியில் உறங்கிகொண்டிருப்பதாக அந்த குழந்தைகள் கூறவே, புகையை சுவாசிக்காமல் இருக்க சட்டையால் முகம், வாயை சுற்றிக்கொண்டு மீண்டும் உள்ளே சென்ற நிக்கோலஸ்(Nicholas Bostick), வெளியே வர முடியாதபடி தீப்பற்றி எரிந்ததால், குழந்தையை தன் கரங்களால் பற்றிக்கொண்டு ஜன்னல் வழியாகக் கீழே குதித்துள்ளார்.